/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு
/
மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு
ADDED : டிச 25, 2024 02:06 AM
சேந்தமங்கலம், டிச. 25-
கொல்லிமலையில், 24 பஞ்சாயத்துகள் உள்ளன. இங்கு, 250க்கும் மேற்பட்ட கிராமங்கள் வனப்பகுதியில் உள்ளது. சில மாதத்திற்கு முன், விளாரம் பகுதியில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தபோது, சிறுத்தை புலி ஒன்று பஸ்சின் குறுக்கே ஓடியது. இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, கிழக்கு வலவு, இலக்கியம்பட்டி பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகள் திடீரென மாயமாகின. விவசாயிகள் வனப்பகுதியில் தேடியபோது, 4 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, வனத்துறையினர் கூறுகையில், 'சிறுத்தை புலிக்கான தடயங்கள் ஏதும் கிடைக்க வில்லை. மலைப்பகுதியில் சுற்றித்திரியும் செந்நாய்கள் தான் ஆடுகளை கடித்திருக்கும்' என்றனர்.

