ADDED : செப் 05, 2026 05:54 AM
எலச்சிப்பாளையம்:எலச்சிபாளையம்
அடுத்த சக்கராம்பாளையம் புதுாரை சேர்ந்தவர் சேகர், 45, மகள் சுபிதா,
19; ராசிபுரம், திருவள்ளுவர் அரசு கலை கல்லுாரியில், இரண்டாமாண்டு
பி.எஸ்சி., கணிதவியல் படித்து வந்தார். அதேபோல், நிவேதா, 17,
எலச்சிபாளையம் அரசு பள்ளியில், பிளஸ் 1ம்; தனஸ்ரீ, 13, ஏழாம்
வகுப்பும்; ரமேஷ்பாபு மகள் அபிநயா, 12, ஆறாம் வகுப்பும் படித்து
வந்தனர். நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, சுபதா, டி.வி.எஸ்.,
எக்ஸல் மொபட்டில், தன் தங்கைகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு
சென்றார்.
அப்போது, சாலையை கடக்க முயன்றபோது, ராசிபுரத்தில்
இருந்து, திருச்செங்கோடு நோக்கி வந்த தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி
பஸ், மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், நான்கு
பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். எலச்சிப்பாளையம் போலீசார்
தனியார் கல்லுாரி பஸ் டிரைவரான, ராசிபுரம், ஒடுவன்குறிச்சியை
சேர்ந்த பெருமாள் மகன் பிரவீன், 23, என்பவரை கைது செய்தனர்.
* தமிழக
முதல்வர் விஜய், உயிரிழந்த மாணவியர்களின் குடும்பத்தினருக்கு,
தலா, 3 லட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, நாமக்கல் கலெக்டர் மதுபாலன் அக்குடும்பத்தினருக்கு, தலா, 3
லட்சம் ரூபாய் வீதம் காசோலை வழங்கினார்.
