/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் உழவர் சந்தையில் 40 டன் காய்கறி விற்பனை
/
ராசிபுரம் உழவர் சந்தையில் 40 டன் காய்கறி விற்பனை
ADDED : ஜூலை 14, 2025 03:56 AM
ராசிபுரம்: ராசிபுரம் உழவர் சந்தைக்கு, நாமகிரிப்பேட்டை யூனியன், மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி, ராசிபுரம், வெண்ணந்துார் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகளை அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
நேற்று நடந்த சந்தை யில் தக்காளி கிலோ, 30 ரூபாய், கத்திரிக்காய், 60, வெண்டை, 30, புடலை, 40, பீர்க்கன், 48, பாகல், 65, சுரைக்காய், 65, பச்சை மிளகாய், 45, முருங்கை, 70, சின்ன வெங்காயம், 50, பெரிய வெங்காயம், 36, முட்டைகோஸ், 22, கேரட், 85, பீன்ஸ், 95, பீட்ரூட், 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், வாழைப்பழம், 40 ரூபாய், கொய்யா, 60, பப்பாளி, 25, தர்பூசணி, 12, எலுமிச்சை, 75, விளாம் பழம், 40 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று ஒரே நாளில், 253 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 29,300 கிலோ காய்கறி, 10,640 கிலோ பழங்கள், 395 கிலோ பூக்கள் என மொத்தம், 39,545 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு, 17.60 லட்சம் ரூபாயாகும். 9,428 பேர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர். நேற்று ஒரே நாளில், 40 டன் காய்கறி, பழங்கள் விற்பனையாகின.