/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரியில் 40வது தேசிய கண்தான வார விழா நிறைவு
/
நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரியில் 40வது தேசிய கண்தான வார விழா நிறைவு
நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரியில் 40வது தேசிய கண்தான வார விழா நிறைவு
நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரியில் 40வது தேசிய கண்தான வார விழா நிறைவு
ADDED : செப் 09, 2025 02:06 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், '40-வது தேசிய கண் தான இருவார விழா- 2025' நேற்று நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:
கண் தானத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் தேசிய கண் தான இருவார விழா நடந்து வருகிறது. பார்வையற்றவர்களுக்கு ஒளி கொடுக்கும் இந்த உன்னத பணியின் அவசியத்தை, மக்களுக்கு உணர்த்துவதே இதன் நோக்கம். மேலும், பார்வை இழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒருவர் இறந்த பின் செய்யப்படும் கண் தானம், இரண்டு பார்வையற்ற நபர்களுக்கு கருவிழி தானம் செய்வதன் மூலம் பார்வை அளிக்க உதவுகிறது. இது ஒரு தொண்டு மற்றும் சமூக நலனுக்காக செய்யப்படும் ஒரு தன்னார்வ செயல்.
நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில், '40-வது தேசிய கண் தான இருவார விழா 2025' கடந்த, 25ல் தொடங்கி, இன்று (நேற்று) வரை நடந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, நாமக்கல் ராமாபுரம் பாவடி தெருவை சேர்ந்த பரமசிவன் என்பவரின் கண்கள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது குடும்பத்தாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், கண் தானம் குறித்து நடந்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவ கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் சாந்தா அருள்மொழி, துறை அலுவலர்கள், டாக்டர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.