/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதைப்பொருள் 471 கிலோ பறிமுதல்: டிரைவருக்கு 'காப்பு'
/
போதைப்பொருள் 471 கிலோ பறிமுதல்: டிரைவருக்கு 'காப்பு'
போதைப்பொருள் 471 கிலோ பறிமுதல்: டிரைவருக்கு 'காப்பு'
போதைப்பொருள் 471 கிலோ பறிமுதல்: டிரைவருக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 16, 2025 07:32 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டி பைபாஸ் பிரிவில், எஸ்.ஐ., தமிழ்குமரன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராசிபுரத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த, 'ஈச்சர்' லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, லாரியில் இருந்த வெள்ளை நிற சாக்கு மூட்டையை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட, 471 கிலோ போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கொண்டு வந்த லாரி டிரைவர், மேட்டூர், வெள்ளப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன், 48, என்பவரை சேந்தமங்கலம் போலீசார் கைது செய்தனர்.