/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
5 தலைமுறையாக தொடரும் வினோதம்: மாடு பூ தாண்டும் விழா கோலாகலம்
/
5 தலைமுறையாக தொடரும் வினோதம்: மாடு பூ தாண்டும் விழா கோலாகலம்
5 தலைமுறையாக தொடரும் வினோதம்: மாடு பூ தாண்டும் விழா கோலாகலம்
5 தலைமுறையாக தொடரும் வினோதம்: மாடு பூ தாண்டும் விழா கோலாகலம்
ADDED : ஜன 18, 2024 01:12 PM
நாமக்கல்: தொட்டியநாய்க்கர் சமூகத்தினரால், 5 தலைமுறையாக நடத்தப்படும் மாடு பூ தாண்டும் வினோத நிகழ்ச்சியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் வாழவந்திநாடு, பிள்ளூர்நாடு உள்ளிட்ட இடங்களில் தொட்டியநாய்க்கர் சமூகத்தினர் பரவலாக வசிக்கின்றனர். அவர்கள், ஐந்து தலைமுறையாக மாடு பூ தாண்டும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, காப்பு கட்டிய மறுநாள் முதல், ஊர் ஊராக செசன்று நன்கொடை வசூல் செய்கின்றனர். தொடர்ந்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில், மஞ்சள்துாள், ஆவாரம்பூ, கரும்பு, வெற்றிலை பாக்கு கொண்டு எல்லைக்கோடு அமைக்கின்றனர். அதையடுத்து, கோவில் மாடுகளை குறிப்பிட்ட இடத்தில் இருந்து விரட்டுகின்றனர். அந்த மாடுகள் ஓடிவந்து எல்லைக்கோட்டை தாண்டுவதை, பூ தாண்டும் விழாவாக அந்த சமூகத்தினர் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த விழா, மோகனுார் ஒன்றியம், கொமரிபாளையம் பஞ்சாயத்து ஊனாங்கல்பட்டி, பரளி பஞ்சாயத்து ஒத்தையூர், நல்லையம்பட்டி, என்.புதுப்பட்டி பஞ்சாயத்து மேலப்பட்டி, லத்துவாடி பஞ்சாயத்து தொட்டிப்பட்டி, எஸ்.வாழவந்தி பஞ்சாயத்து மேலப்பட்டி, திண்டமங்கலம் பஞ்சாயத்து வடக்குப்பட்டி ஆகிய கிராமங்களில், தொன்று தொட்டு நடந்து வருகிறது.
ஊனாங்கல்பட்டி, ஒத்தையூர் மற்றும் தொட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் நடத்திய மாடு பூ தாண்டும் நிகழ்ச்சி, ஊனாங்கல்பட்டியில் நேற்று நடந்தது. நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் போட்டியை துவக்கி வைத்தார்.
அதில், ஊனாங்கல்பட்டி, சின்ன பெத்தாம்பட்டி, குன்னத்துார், மல்லுமாச்சம்பட்டி, மேலப்பட்டி, கோவில்பட்டி பகுதியை சேர்ந்த ஆறு சுவாமி மாடுகள் பங்கேற்றன.
மூன்று முறை மாடு பூ தாண்டும் போட்டி நடந்தது. முடிவில், ஊனாங்கல்பட்டியை சேர்ந்த சுவாமி மாடு வெற்றி பெற்றது. தொடர்ந்து அவ்வூர் கோமாளியை, குதிரை மீது அமரவைத்து ஊர்வலமாக அழைத்து சென்றனர். ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.