/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கூட்டு குடிநீர் திட்டத்தில் 5 லட்சம் பேர் பயன்; ராசிபுரத்தில் எம்.பி., ராஜேஸ்குமார் பேச்சு

ADDED : மார் 25, 2024 07:19 AM
ராசிபுரம் : ராசிபுரத்தில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரன் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தலைமை வகித்து வேட்பாளரை அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:வந்திருக்கும் கூட்டத்தை பார்த்தால் நிச்சயம் நம் வேட்பாளர், 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என உறுதி கூறுகிறேன். தமிழக முதல்வர் கிராம மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை, இலவச பஸ், உயர்கல்விக்கான உதவித்தொகை, நகைக்கடன் தள்ளுபடி வழங்கியுள்ளார்.
ராசிபுரம் மக்களின் நீண்டநாள் பிரச்னையான குடிநீர் பிரச்னையை தீர்த்துள்ளார். இதனால், 5 லட்சம் மக்கள் பயன்பெறுவர். ஆனால், கடந்த, 10 ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியில் கோடநாடு கொலையும் பொள்ளாச்சி பாலியல் வழக்கும் தான் சாதனை. தேர்தல் நடக்கும் இந்த சமயத்தில் கூட பிரதமர் வெளிநாடு சென்று அங்கு பதக்கம் வாங்கி கொண்டு இருக்கிறார். அவருக்கு நாட்டு மக்களை குறித்து கவலை இல்லை. மக்களின் மீது உண்மையான அக்கரை கொண்ட, தி.மு.க., அரசின் வேட்பாளருக்கு ஓட்டளித்து பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் மதிவேந்தன், கொ.ம.தே.க., செயலாளர் ஈஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.