ADDED : ஜூலை 15, 2026 05:26 AM
அ நிறம் | அளவு
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட மங்களம், காளிப்பட்டி, மல்லசமுத்திரம் டவுன், சூரியகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று, உணவு பாதுகாப்பு அலுவலர் அசோக் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, மளிகை கடை, பெட்டிக்கடைகளில் சோதனையிட்டதில், ஐந்து கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. அவர்களுக்கு, 25,000 மற்றும் 50,000 என, அபராதம் விதிக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டது. மேலும், கடந்த, இரண்டு மாதங்களில் மல்லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடங்களில் மது அருந்திய, 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
