/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
50 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்
/
50 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்
ADDED : நவ 15, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில், 50 கிலோ பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர்.
சேந்தமங்கலத்தில் உள்ள பெட்டி கடைகளில், தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து பேக்கரி, ஓட்டல், மளிகை கடைகளில் டவுன் பஞ்., செயல் அலுவலர் வனிதா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, பஸ் ஸ்டாண்ட், மெயின் ரோடு, காந்திபுரம் பகுதிகளில் ஆய்வு செய்தனர். அதில், 50 கிலோ கேரி பேக், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆய்வின் போது துப்புரவு ஆய்வாளர் பால்ராஜ், மேற்பார்வையாளர் அழுகுராஜா உடனிருந்தனர்.