/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் 5,12,000 பனை விதைகள் நடவு தமிழகத்தில் நாமக்கல் முதலிடம் பெற்று சாதனை
/
மாவட்டத்தில் 5,12,000 பனை விதைகள் நடவு தமிழகத்தில் நாமக்கல் முதலிடம் பெற்று சாதனை
மாவட்டத்தில் 5,12,000 பனை விதைகள் நடவு தமிழகத்தில் நாமக்கல் முதலிடம் பெற்று சாதனை
மாவட்டத்தில் 5,12,000 பனை விதைகள் நடவு தமிழகத்தில் நாமக்கல் முதலிடம் பெற்று சாதனை
ADDED : அக் 31, 2024 06:39 AM
நாமக்கல்: ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை, 5 லட்சத்து, 12,000 விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், மாநில அளவில், நாமக்கல் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில், மாநில மரமான பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் வகை-யிலும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்-றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழக பசுமை இயக்கம் சார்பில், ஒரு கோடி பனை விதைகளை நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்-ளது.
ராமேஸ்வரத்தில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்ய-நாதன், இப்பணியை தொடங்கி வைத்தார். இதை-யொட்டி, 5 கட்டங்களாக பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல், பூம்புகார் வரை தர்ம-புரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட, 8 மாவட்-டங்களில், காவிரிக்கரையின் இருபக்கங்களிலும், 416 கி.மீ., துாரத்திற்கு மேற்கொள்ள முடிவு செய்-யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரங்களிலும், நீர்நிலைகளிலும் பனை விதைகளை நடும் பணி, கடந்த, நவ., முதல் வாரத்தில் தொடங்கியது. அதில், மாணவர்கள், சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள், சுற்-றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்று பனை விதை-களை நடவு செய்தனர்.இதுகுறித்து, அரசு அதிகாரிகள் சிலர் கூறியதா-வது:- ஒரு கோடி பனைவிதைகள் நடும் திட்-டத்தில், இதுவரை மொத்தமாக, 33 லட்சத்து, 73,138 விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில், 5 லட்சத்து, 12,591 பனை விதைகள் இதுவரை நடவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், மாநில அளவில், நாமக்கல் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மாவட்டத்தில், இப்பணியில், 3,101 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்-ளனர்.மேலும், 4 லட்சத்து, 91,836 பனை விதைகள் நடவு செய்த விழுப்புரம் மாவட்டம், இரண்டாமிடம், 3 லட்சத்து, 42,735 பனைவிதைகள் நடவு செய்த சிவகங்கை மாவட்டம் மூன்றாமிடம் பிடித்துள்-ளன. செங்கல்பட்டு, சேலம், வேலுார் ஆகிய மாவட்டங்கள் முறையே, 4, 5, 6வது இடங்களை பிடித்துள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.