ADDED : மே 30, 2025 01:23 AM
நாமக்கல் :நாமக்கல் நகரில் நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 52 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், நடப்பாண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளான கடந்த, 4-ம் தேதி கோடை மழை பெய்த நிலையில், வெயிலின் தாக்கம் முடியும் நாளான, நேற்று முன்தினமும் மழை பெய்தது. அதிகபட்சமாக நாமக்கல் நகரில், 52 மி.மீ., மழை பதிவானது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:
நாமக்கல், -52, கலெக்டர் அலுவலகம்-, 19, கொல்லிமலை-, 7, சேந்தமங்கலம், -7, ப.வேலுார், -5, எருமப்பட்டி, -3 மி.மீ., மழை பெய்தது. நாமக்கல்லில் பெய்த மழையால், காவேட்டிப்பட்டி பகுதியில் உள்ள ஏரி நிரம்பி, வள்ளிபுரம் வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள வள்ளிபுரம்- கருப்பட்டிபாளையம் சர்வீஸ் சாலையில், 2 அடி உயரத்திற்கு தேங்கி உள்ளது.
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். பலர் வாகனங்களை திருப்பிக் கொண்டு சென்றனர். எனவே, சர்வீஸ் சாலையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.