தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ரூ.57 லட்சத்துக்குமஞ்சள் விற்பனை

ரூ.57 லட்சத்துக்குமஞ்சள் விற்பனை

ரூ.57 லட்சத்துக்குமஞ்சள் விற்பனை


ADDED : மார் 26, 2025 02:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2025 02:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரூ.57 லட்சத்துக்குமஞ்சள் விற்பனை

நாமகிரிப்பேட்டை:நாமக்கல் மாவட்டத்தில், மஞ்சள் விற்பனையில் நாமகிரிப்பேட்டை முக்கிய இடத்தை வகிக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் உள்ள முக்கியமான மஞ்சள் மார்க்கெட்டில் நாமகிரிப்பேட்டையும் ஒன்று. இங்கு கூட்டுறவு அமைப்பான, ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது. கடந்த, மூன்று வாரங்களுக்கு முன் மஞ்சள் வரத்து தொடங்கியது.

சீசன் தொடங்கிய முதல் வாரம், 179 மூட்டை மஞ்சள் வரத்தாகி, 14 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 9,903 ரூபாய், அதிகபட்சம், 16,705 ரூபாய்; உருண்டை ரகம் குறைந்தபட்சம், 8,002 ரூபாய், அதிகபட்சம், 13,509 ரூபாய்க்கு விற்பனையானது. பனங்காலி, 8,435 ரூபாயிலிருந்து, 26,689 ரூபாய் வரை விற்பனையானது. விரலி, 528, உருண்டை, 211, பனங்காலி, 39 என, 778 மூட்டை மஞ்சள், 57 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us