/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இடைநின்ற 59 மாணவர்கள் கண்டுபிடிப்பு 12 பேர் வயதிற்கேற்ற வகுப்பில் சேர்ப்பு
/
இடைநின்ற 59 மாணவர்கள் கண்டுபிடிப்பு 12 பேர் வயதிற்கேற்ற வகுப்பில் சேர்ப்பு
இடைநின்ற 59 மாணவர்கள் கண்டுபிடிப்பு 12 பேர் வயதிற்கேற்ற வகுப்பில் சேர்ப்பு
இடைநின்ற 59 மாணவர்கள் கண்டுபிடிப்பு 12 பேர் வயதிற்கேற்ற வகுப்பில் சேர்ப்பு
ADDED : டிச 12, 2024 07:38 AM
ப.வேலுார்: ஐந்து குறுவள மையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், 59 இடை-நின்ற மாணவ, மாணவியர் கண்டறியப்பட்டனர். அதில், 12 பேர் வயதிற்கேற்ற வகுப்பில் சேர்க்கப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை யூனியனுக்கு உட்பட்ட பொத்-தனுார், கபிலர்மலை, பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், சோழ-சிராமணி ஆகிய, ஐந்து குறுவள மையத்திற்குட்பட்ட பகுதி-களில், இடைநின்ற மாணவ, மாணவியர் கண்டுபிடிக்கப்பட்டனர். இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர்கள் கற்பகம், பிச்ச-முத்து, வட்டார கல்வி அலுவலர் சுரேஷ், மாவட்ட திட்டக்கூறு
ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணலட்சுமி, சிந்துஜா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், குறுவள மையத்திற்கு உட்பட்ட பகுதி-களில் இடைநின்ற, 59 மாணவ, மாணவியர் வீடுகளுக்கு நேரடி-யாக சென்று கள ஆய்வு
மேற்கொண்டனர்.அதில், பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்-களின் குழந்தைகள், வேறு மாநிலம், மாவட்டம் சென்றவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்-பட்டது. மேலும், 12 பேர்,
வயதிற்கேற்ற வகுப்பில் சேர்க்கப்பட்-டனர். அவர்களுக்கு, தமிழக அரசு வழங்கும் இலவச பாட, நோட்டு புத்தகம், சீருடை, பை, காலணிகள் வழங்கப்பட்டன. இவர்களின் வருகையை கண்காணிக்க, வட்டார கல்வி அலுவலர்
தலைமையில், வாரந்தோறும் தவறாமல் களஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. வட்டார சிறப்பு பயிற்றுனர்கள் அருள்குமார், சரஸ்வதி, ஆசிரியர் பயிற்றுனர்கள் வனஜா, பிரேம்குமாரி உள்-ளிட்டோர் பங்கேற்றனர்.

