/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஏ.டி.எம்., கொள்ளையன் முகமது இக்ரம் மீது மேற்குவங்க மாநிலத்தில் 6 வழக்குகள் பதிவு
/
ஏ.டி.எம்., கொள்ளையன் முகமது இக்ரம் மீது மேற்குவங்க மாநிலத்தில் 6 வழக்குகள் பதிவு
ஏ.டி.எம்., கொள்ளையன் முகமது இக்ரம் மீது மேற்குவங்க மாநிலத்தில் 6 வழக்குகள் பதிவு
ஏ.டி.எம்., கொள்ளையன் முகமது இக்ரம் மீது மேற்குவங்க மாநிலத்தில் 6 வழக்குகள் பதிவு
ADDED : அக் 01, 2024 07:18 AM
நாமக்கல்: ''ஏ.டி.எம்., கொள்ளையன் முகமது இக்ரம் மீது மேற்கு வங்க மாநிலத்தில், 6 வழக்குகள் பதிவாகியுள்ளது,'' என, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தெரிவித்தார்.
கேரள மாநிலம் திருச்சூரில், கடந்த, 27ல், ஏ.டி.எம்.,ஐ உடைத்து பணம் கொள்ளை அடித்த ஹரியானா கொள்ளையர்கள், நாமக்கல் மாவட்டம் வழியாக தப்பிக்க முயன்றனர். அவர்களை, பள்ளிப்பா-ளையம், வெப்படை அடுத்த சன்னியாசிப்பட்டியில் போலீசார் மடக்கி பிடித்தனர். இவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட, 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த வெப்படை போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கொள்ளையர்கள், நாடு முழு-வதும் பல்வேறு மாநிலங்களில் ஏ.டி.எம்.,ஐ உடைத்து கொள்-ளையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.இதுகுறித்து, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் கூறியதாவது:கைது செய்யப்பட்ட ஏ.டி.எம்., கொள்ளையர்கள் மீது வெவ்வெறு மாநிலங்களில், ஒன்று அல்லது இரண்டு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதில், முகமது இக்ரம் மீது, மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும், 6 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஏ.டி.எம்., கொள்ளை, ஆயுதம் வைத்திருப்பது போன்ற வகையில் வழக்குப்-பதிவாகி கைதாகி உள்ளார். அதனால், இந்தியா முழுதும் கொள்-ளையர்களின் புகைப்படங்களை அனுப்பி வழக்கு தொடர்பான விபரங்களை சேகரிக்க முடிவு செய்துள்ளோம். திருச்சூர் போலீசார், சிறையில் அடைக்கப்பட்ட, 5 பேரையும் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்-றனர். அதை தொடர்ந்து நாங்களும் கொள்ளையர்களை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க உள்ளோம். 'மேவாட்' என்ற பகுதி ஹரியானா மாநிலத்தின் எல்லையோரம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த நபர்கள், முந்தைய காலங்களில் லாரிகளில் பொருட்கள் திருட்டு, உதிரிபாகங்களை திருடுவது போன்ற சிறு, சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். தொடர்ந்து படிப்படியாக ஏ.டி.எம்., இயந்திரங்களை உடைத்து திருட துவங்கி உள்ளனர். தற்போது அப்பகுதியை சேர்ந்த நபர்கள் அதிக அளவில் சைபர் குற்றங்களிலும் ஈடுபடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.