ADDED : மார் 13, 2026 04:47 AM
அ நிறம் | அளவு
குமாரபாளையம்:பாலியல் குற்றவாளிக்கு, அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர-கோரி, குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
குமார-பாளையம் பகுதியில், சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த நபருக்கு, அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரக் கோரி, குமாரபா-ளையம் போலீஸ் ஸ்டேஷன் முன் மார்ச், 9ல், மறியல் போராட்-டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் ராதா, 34, சவுந்தர்யா, 32, அப்பாஸ், 35, வாணி, 36, விஸ்வநாதன், 48, லாரன்ஸ், 37, என 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
