/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளி பஸ்கள் மோதி விபத்து 6 மாணவர்கள் லேசான காயம்
/
பள்ளி பஸ்கள் மோதி விபத்து 6 மாணவர்கள் லேசான காயம்
ADDED : ஜூலை 09, 2025 01:41 AM
ப.வேலுார், பரமத்தி அருகே, கீரம்பூரில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் நேற்று மாலை, பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, இரண்டு பஸ்களில் மாணவர்கள் சென்றனர். ராசாம்பாளையம் சுங்கச்சாவடி அருகே பஸ் சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் திடீரென ஒரு கார் வந்தது.
இதனால் முன்னால் சென்ற பஸ் டிரைவர், கார் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டார். அப்போது பின் தொடர்ந்து வந்த மற்றொரு பஸ், முன்னாள் நின்ற பஸ்சின் பின்புறத்தில் மோதியது. இந்நிலையில், பஸ்சுக்கு பின்னால் வந்த கார், இரண்டாவதாக வந்த பஸ்சின் பின்புறம் மோதியது.
இந்த விபத்தில் பஸ் கண்ணாடிகள் உடைந்தும், திடீரென பிரேக் போட்டதால் மாணவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்ததால், ஆறு மாணவர்கள், இரண்டு பஸ் டிரைவர்கள் லேசான காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி போலீசார், விபத்தில் சிக்கிய இரு பஸ்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். தேசிய நெடுஞ்சாலையில், எதிர் திசையில் வந்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை, போலீசார் தேடி வருகின்றனர்.