/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் படித்த 60 பேர் அரசு தேர்வில் தேர்ச்சி

ADDED : ஜன 20, 2024 09:55 AM
நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் அடுத்த காக்காவேரி முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நேற்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில், 32 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கலெக்டர் உமா பணி நியமன ஆணை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: நாமக்கல் மாவட்டம், பள்ளி மற்றும் அனைத்து வகையான கல்லுாரிகளும் அமைய பெற்று கல்வியில் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற நோக்கில், வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் பயின்ற மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்தப்படும் குரூப்-4 தேர்வில், 22 பேர், குரூப்-2 தேர்வில், 13 பேர், எஸ்.ஐ., தேர்வில், 12 பேர், காவலர் பணியிடத்திற்கு, 13 பேர் என, 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.