/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஈரோடு தாய்ப்பால் வங்கி மூலம் பயன் பெற்ற 613 குழந்தைகள்
/
ஈரோடு தாய்ப்பால் வங்கி மூலம் பயன் பெற்ற 613 குழந்தைகள்
ஈரோடு தாய்ப்பால் வங்கி மூலம் பயன் பெற்ற 613 குழந்தைகள்
ஈரோடு தாய்ப்பால் வங்கி மூலம் பயன் பெற்ற 613 குழந்தைகள்
ADDED : மே 01, 2025 01:54 AM
ஈரோடு:ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தாய்ப் பால் வங்கி மூலம், 613 குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர்.ஈரோடு, அரசு மருத்துவமனை பல்நோக்கு சிறப்பு உயர் சிகிச்சை மைய வளாகம், இரண்டாம் தளத்தில் தாய்ப்பால் வங்கி செயல்படுகிறது. கடந்தாண்டு ஜூலை, 31ல் துவங்கப்பட்ட இவ்வங்கி, பெண்களிடம் இருந்து தாய்ப்பாலை பெற்று, ஓராண்டு வரை பாதுகாத்து, தாய்ப்பால் கிடைக்காத குழந்தை
களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். குறை மாத பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் உயிரை காப்பாற்ற, தாய்ப்பாலே சிறந்த மருந்தாகும். அதுபோல, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் குழந்தைகள், விரைவாக குணமடைய தாய்ப்பால் முக்கியம். இவ்வாறு, ஈரோடு அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கி மூலம், 613 குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர்.
இதுபற்றி, ஈரோடு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வெங்கடேஷ், பச்சிளம் குழந்தைகள் பிரிவு பொறுப்பாளர் டாக்டர் சீனிவாசன் ஆகியோர் கூறியதாவது: இங்குள்ள தாய்ப்பால் வங்கி மூலம் இதுவரை, 859 பெண்களிடம் இருந்து, 142 லிட்டர் தாய்ப்பால் பெறப்பட்டுள்ளது. தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு, இப்பாலை இலவசமாக வழங்குகிறோம். பெண்களிடம் இருந்து பெறப்படும் தாய்ப்பாலை ஆய்வு செய்து, கிருமி தொற்று இல்லை என உறுதி செய்து பதப்படுத்துகிறோம். மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் உறை நிலை பெட்டி
யில் (பிரீசர் பாக்ஸ்) வைத்து பாதுகாக்கிறோம். தேவைப்படும் அளவு பாலை உறை நிலையில் இருந்து எடுத்து, திரவ நிலைக்கு வந்ததும் பயன்படுத்துகிறோம். உறைநிலை பெட்டியில் இருந்து எடுத்த பாலை, 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும். குழந்தை பெற்ற பெண்கள், தனது குழந்தையின் தேவைக்கு கூடுதலாக உள்ள பாலை, இங்கு வந்து கொடுக்கலாம். தாய்ப்பால் சுரக்காத பெண்களின் குழந்தைகளுக்கு, இந்த பாலை பயன்படுத்துகிறோம். இவ்வாறு பாலை கொடுப்பதால், எந்த தீங்கும்
ஏற்படாது. இவ்வாறு கூறினர்.