ADDED : பிப் 11, 2026 07:26 AM
மோகனுார்: சென்னையில் மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்.,களில் துாய்மை பணியாளர்களுக்கு, காலை உணவு வழங்கும் திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். இதையடுத்து, நாமக்கல்லில் கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலையில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் துவக்கி வைத்தார்.
மோகனுார் டவுன் பஞ்.,ல் நடந்த நிகழ்ச்சிக்கு, செயல் அலுவலர் கலைராணி தலைமை வகித்தார். தி.முக., டவுன் பஞ்., செயலாளர் செல்லவேல், முன்னாள் தலைவர் உடையவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டவுன் பஞ்., தலைவர் வனிதா, துணைத்தலைவர் சரவணகுமார் ஆகியோர், பஞ்சாயத்தில் பணியாற்றும், 67 துாய்மை பணியாளர்களுக்கு, காலை உணவு வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தனர். கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
