/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குடியரசு தினத்தையொட்டி 700 போலீசார் பாதுகாப்பு
/
குடியரசு தினத்தையொட்டி 700 போலீசார் பாதுகாப்பு
ADDED : ஜன 26, 2025 04:22 AM
நாமக்கல்: 'குடியரசு தினத்தையொட்டி, மாவட்டம் முழுவதும், 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்-ளனர்' என, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தெரிவித்-துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும், 76வது குடியரசு தினவிழா, இன்று கொண்டாடப்படுகிறது. அதை-யொட்டி, மாவட்டம் முழுவதும், 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள், வெடி-பொருள் கண்டுபிடித்து செயலிழக்க செய்யும் போலீசாரால், முக்-கிய இடங்களில் சோதனை செய்தல், மாவட்டத்தில் உள்ள அனைத்து லாட்ஜ், பார்கள் மற்றும் மாவட்டத்தில் தங்கியுள்ள வெளிநாட்டினர் ஆகியவற்றை சோதனை செய்து கண்காணிக்-கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 76வது குடியரசு தின விழாவையொட்டி, மொத்தம், 326 இடங்களில் கிராம சபை கூட்டம் நடக்கிறது. அனைத்து இடங்களுக்கும், போலீசார் பாது-காப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு, எவ்வித அசம்பாவிதமும் ஏற்ப-டாதவாறு பார்த்துக்கொள்ள, அந்தந்த உட்கோட்ட டி.எஸ்.பி.,க்களுக்கு  அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

