/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
74 வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்
/
74 வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜன 28, 2025 07:01 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு தாலுகாவில் உள்ள, 76 கிராம நிர்வாக அலுவலகங்களில், 74 வி.ஏ.ஓ.,க்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள், திருச்செங்கோடு தாலுகா அலுவலகம் முன், நேற்று பணி புறக்கணிப்பு செய்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகத்தில், தலைமையிடத்து துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் கவிதா. இவர் கடந்த, ஏழு ஆண்டுகளாக திருச்செங்கோடு தாலுகாவிற்குள்ளேயே பணியாற்றி வருகிறார். இதனால், வி.ஏ.ஓ.,க்களை மிகவும் தரக்குறைவாக பேசி வருகிறார்.
இதனால் எங்களால் பணியை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என, தெரிவித்தனர். இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார் கூறுகையில், ''தலைமையிடத்து துணை தாசில்தார் கவிதாவை, பணியிட மாற்றம் செய்யாவிட்டால், கிராம நிர்வாக அலுவலர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுச்செல்லவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்,'' என்றார்.