/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
9,114 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க மாவட்டம் முழுவதும் 759 மையங்கள் துவக்கம்
/
9,114 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க மாவட்டம் முழுவதும் 759 மையங்கள் துவக்கம்
9,114 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க மாவட்டம் முழுவதும் 759 மையங்கள் துவக்கம்
9,114 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க மாவட்டம் முழுவதும் 759 மையங்கள் துவக்கம்
ADDED : ஜூலை 16, 2025 01:33 AM
நாமக்கல், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மூலம், இரண்டாம் கட்டமாக, மாவட்டத்தில், 9,114 அடிப்படை எழுத்தறிவு வழங்குவதற்காக, 759 மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மூலம், 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு, அடிப்படை எழுத்தறிவு எண்ணறிவு கல்வி, 2022--23ல் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம், 59,362 கல்லாதோர்கள் பயனடைந்துள்ளனர். இந்த கல்வியாண்டில், முதற்கட்டமாக, 12,889 கற்போர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, மதிப்பீட்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, மாவட்டம் முழுவதும், 759 மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.
அதற்காக, அனைத்து குடியிருப்புகளிலும் கல்லாதோர் கணக்கெடுப்பு பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, கண்டறியப்பட்டவர்கள் அனைவரையும் கற்போர் மையங்களில் சேர்த்து பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதையடுத்து, மாவட்டத்தில் இதுவரை, 9,114 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதன் மூலம், நாமக்கல் மாவட்டத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை, 9,114 கல்லாதவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
பள்ளிப்பாளையம் வட்டார வளமையத்தில் உள்ள பல்லக்காப்பாளையம் பஞ்., தொடக்கப்பள்ளியில், கற்போர் மையம் தொடங்கப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, 'எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வியுடன், தொழிற்கல்வியும் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்' என, அறிவுறுத்தினார்.
உதவி திட்ட அலுவலர் அருள்தாஸ், வட்டார கல்வி அலுவலர் அருள்காமாட்சி, சிந்துஜா, மேற்பார்வையாளர் சரவணன், ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.