ADDED : மே 29, 2024 07:31 AM
நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டை, நாரைக்கிணறு வடுகத்து உடையார் தோட்டத்தை சேர்ந்த வெங்கடாஜலம் மனைவி ரத்தினம், 65.
இவர், தோட்டத்தில் பட்டி அமைத்து, 11 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று அதிகாலை, நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்த ரத்தினம், ஆட்டு பட்டிக்கு சென்று திறந்துள்ளார். அப்போது உள்ளே இருந்து, 2 குள்ள நரிகள் ஓடியுள்ளது. உள்ளே, 8 ஆடுகள் வயிறு, கழுத்து பகுதியில் கடிபட்டு இறந்து கிடந்தன. இரண்டு ஆடுகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தன. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், கால்நடை மருத்துவருடன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.செந்நாய் அல்லது குள்ளநரி கடித்து ஆடுகள் இறந்ததா என்பது குறித்து பரிசோதனை முடிவில் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இறந்த ஆடுகளின் மதிப்பு, ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என ரத்தினம் தெரிவித்தார். நாரைக்கிணறு பகுதியில் ஆடுகளை குள்ளநரி கடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.