/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தகுதிச்சான்று புதுப்பிக்காத 8 வாகனங்கள் பறிமுதல்
/
தகுதிச்சான்று புதுப்பிக்காத 8 வாகனங்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 07, 2025 04:34 AM
ராசிபுரம்: ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் தலைமையில் மோட்டார் வாகன இன்ஸ்-பெக்டர் செல்வகுமார் மற்றும் அலுவலர்கள், நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி, மங்களபுரம் ஆகிய பகுதிகளில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில், தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமல் இயக்கப்பட்ட, 3 டாடா ஏஸ் வாகனமும், 1 பயணியர் ஆட்டோ ரிக்க்ஷா வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு ஆயில்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதேபோன்று தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமல் இயக்கப்பட்ட, 3 டாடா ஏஸ் வாகனம் மற்றும் ஒரு கனரக சரக்கு வாகனம் சிறை-பிடிக்கப்பட்டு ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தணிக்கை மூலம், 1.60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.