ADDED : நவ 19, 2026 05:42 AM
குமாரபாளையம்:குமாரபாளையத்தில்,
நகராட்சி, சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, 800 கிலோ தடை
செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்தனர்.
குமாரபாளையம்
பகுதியில், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதாக நகராட்சி
நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் துறையினருக்கு புகார் வந்தது.
இதையடுத்து, குமாரபாளையம் நகரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில்,
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கிழக்கு வீதியில் உள்ள மளிகை கடை ஒன்றில்
கேரி பேக், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவை, 800 கிலோ
பறிமுதல் செய்யப்பட்டது. சுற்றுச்சூழல்துறை உதவிப்பொறியாளர்
ரிஸ்வான் பேகம், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சிவகுமார்,
சந்தானகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர். நகராட்சி கமிஷனர்
மற்றும் சுற்றுச்சூழல் துறை மாவட்ட அலுவலர் பரிந்துரைப்படி அபராதம்
விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
