/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஒப்பந்த துாய்மை பணியாளர் 86 பேர் 'டிஸ்மிஸ்' மீண்டும் பணி வழங்கக்கோரி தர்ணா போராட்டம்
/
ஒப்பந்த துாய்மை பணியாளர் 86 பேர் 'டிஸ்மிஸ்' மீண்டும் பணி வழங்கக்கோரி தர்ணா போராட்டம்
ஒப்பந்த துாய்மை பணியாளர் 86 பேர் 'டிஸ்மிஸ்' மீண்டும் பணி வழங்கக்கோரி தர்ணா போராட்டம்
ஒப்பந்த துாய்மை பணியாளர் 86 பேர் 'டிஸ்மிஸ்' மீண்டும் பணி வழங்கக்கோரி தர்ணா போராட்டம்
ADDED : ஜூன் 29, 2025 01:08 AM
நாமக்கல், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், 86 பேர் திடீர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள், மீண்டும் பணி வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 'கிறிஸ்டல்' என்ற தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர்கள், பாதுகாவலர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அதில், 86 பேரை, கிறிஸ்டல் நிறுவனம் திடீரென பணி நீக்கம் செய்தது. இதனால் அதிர்ச்சியடைந்த, 86 பேரும், நேற்று காலை, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, துாய்மை பணியாளர்கள் கூறியதாவது: ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம், எங்களுக்கு உரிய சம்பளம் வழங்குவதில்லை. ஒப்பந்தப்படி கூறப்பட்டுள்ள வேலை நேரத்தை விட, கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். தொழிலாளர் வைப்பு நிதி, இ.எஸ்.ஐ., போன்றவை வரவு வைப்பதில்லை. இதுகுறித்து போராட்டம் நடத்தியதால் தான், எங்களை பணி நீக்கம் செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கிறிஸ்டல் நிர்வாகத்தினர் கூறுகையில், 'நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, புதிதாக நேர கட்டுப்பாடு விதிக்கும்படி, சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் அறிவுறுத்தியது. மேலும், நேர கட்டுப்பாட்டை மதித்து பணியாற்றும் தொழிலாளர்களை மட்டும் பணியில் வைத்துக்கொண்டு, மற்றவர்களை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, தற்போது, 86 பேர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்' என்றனர்.
86 பேரை பணி நீக்கம் செய்ததால், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் துாய்மை பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.