/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
/
மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
ADDED : செப் 04, 2025 01:59 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், ஒன்பது ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில், 'நல்லாசிரியர்' விருது வழங்கப்படுகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
இதில், நாமக்கல் மாவட்டத்தில், ஒன்பது பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். அவர்களுக்கு, சென்னையில் நாளை நடக்கும் விழாவில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்குகின்றனர்.
அவர்களின் விபரம் வருமாறு: ராணி, தலைமையாசிரியர், பாரதி மேல்நிலைப்பள்ளி, ரெட்டிப்பட்டி; பிரியங்கா, முதுகலை ஆசிரியர், நிதி உதவி மகளிர் மேல்நிலைப்பள்ளி, ப.வேலுார்; அத்தியப்பன், பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆர்.பட்டணம்; கேசவன், ஓவிய ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வெண்ணந்துார்;
மணிகண்டன், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பூசாரிபாளையம், ராசிபுரம்; கவுசல்யாமணி, தலைமையாசிரியர், நகராட்சி நடுநிலைப்பள்ளி, மேற்கு காலனி, பள்ளிப்பாளையம். விஜய், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வால்ராசாம்பாளையம், திருச்செங்கோடு; நசிமா, பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பிள்ளைக்களத்துார், பரமத்தி; ஸ்டாலின் பாக்கியநாதன், முதல்வர், மகேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குமாரமங்கலம், திருச்செங்கோடு.