ADDED : ஏப் 10, 2025 01:47 AM
அ நிறம் | அளவு
ரூ.9.50 லட்சத்திற்குபருத்தி விற்பனை
மல்லசமுத்திரம்:திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடக்கிறது.
அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில் சூரியகவுண்டம்பாளையம், மேல்முகம், கீழ்முகம், பீமரப்பட்டி, காளிப்பட்டி, மங்களம், மரப்பரை, பருத்திப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 60 கிலோ எடைகொண்ட, மொத்தம், 480 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், பி.டி., ரகம் குவிண்டால், 7,199 ரூபாய் முதல், 8,439 ரூபாய், கொட்டு பருத்தி, 4,199 ரூபாய் முதல், 5,869 ரூபாய் என, மொத்தம், 9.50 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது.
