தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 98 பேர் கைது

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 98 பேர் கைது

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 98 பேர் கைது


ADDED : பிப் 12, 2026 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 06:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: ஆந்திராவை போல், ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள், 98 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழக அரசு, வருவாய்த்துறை மூலம், ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப, 1,500 ரூபாய், நலத்துறை சார்பில், 2,000 ரூபாய் வழங்குகிறது. ஆனால், அண்டை மாநிலமான ஆந்திராவில், 6,000 முதல், 15,000 ரூபாய், புதுச்சேரியில், 4,000 முதல், 5,700 ரூபாய், தெலுங்கானாவில், 4,016, டில்லியில், 3,000 என, பல மாநிலங்களில் உதவித்தொகையை உயர்த்தி வழங்குகின்றனர். ஆனால், தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு ஏற்றபடி உதவித்தொகை வழங்கவில்லை.

இதனால், மாற்றுத்திறாளிகளுக்கான உதவித்தொகையை, அண்டை மாநிலமான ஆந்திராவை போல் உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாநிலம் முழுவதும் தொடர் மறியல் போராட்டம் நேற்று நடந்தது.

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, சங்க மாவட்ட தலைவர் முருகேசன், செயலாளர் நாகேஸ்வரி, பொருளாளர் அருண்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், 98 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us