/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலரில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
/
டூவீலரில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
டூவீலரில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
டூவீலரில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
ADDED : ஆக 15, 2024 06:54 AM
ராசிபுரம்: ராசிபுரம், ராம்நகரை சேர்ந்த சுந்தர்ராஜன் மனைவி சுதா, 42; ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லுாரியில், வேதியியல் ஆய்வக உதவியாளர்.
இவர், நேற்று மாலை வேலை முடிந்து, தன் டூவீலரில் ராசிபுரத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார். எல்.ஐ.சி., அலுவலகம் அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த, இரண்டு வாலிபர்கள் சுதா கழுத்தில் அணிந்திருந்த, ஐந்து பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.செயினை பறித்தபோது, சுதா தவறி கீழே விழுந்து காயமடைந்தார். இதைப்பார்த்த அப்பகுதி இளைஞர்கள், டூவீலரில் விரட்டிச் சென்றும் வழிப்பறி வாலிபர்களை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து புகார்படி, ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். பட்டப்பகலில், நாமக்கல் பிரதான சாலையில், டூவீலரில் சென்ற பெண்ணிடம் நகையை பறித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.