/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மொபட் மீது பைக் மோதி விவசாயி பலி 'வீலிங்' செய்த சிறுவனால் விபரீதம்
/
மொபட் மீது பைக் மோதி விவசாயி பலி 'வீலிங்' செய்த சிறுவனால் விபரீதம்
மொபட் மீது பைக் மோதி விவசாயி பலி 'வீலிங்' செய்த சிறுவனால் விபரீதம்
மொபட் மீது பைக் மோதி விவசாயி பலி 'வீலிங்' செய்த சிறுவனால் விபரீதம்
ADDED : ஆக 04, 2024 03:40 AM
பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அருகே, பைக்கில் சிறுவர்கள் 'வீலிங்' செய்த-போது, எதிரே வந்த மொபட் மீது மோதியதில் விவசாயி பலி-யானார்.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே, மேல்எண்டபட்-டியை சேர்ந்த விவசாயி மாணிக்கம், 63; டி.வி.எஸ்., மொபட்டில், தர்மபுரி நோக்கி நேற்று மதியம், 12:00 மணிக்கு சென்றார். அதேசமயம் எதிரே யமஹா-ஆர்-15 பைக்கில் இருவர் வந்தனர். எண்டபட்டி பஸ் நிறுத்தம் அருகே பைக்கை ஓட்டி-யவர், திடீரென 'வீலிங்' செய்ய முயன்றார்.
அப்போது எதிரே வந்த மொபட்டில் வந்த மாணிக்கம் மீது பைக் மோதியது. இதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார்.
பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணையில், பைக்கை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது, 17 வயது சிறுவன், பாப்பாரப்-பட்டி அரசு பள்ளியில் பிளஸ் 1 படிப்பதும் தெரிந்தது. சிறுவ-னுடன் பைக்கில் வந்தது சக மாணவன் என்றும் தெரிகிறது. இது-குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.