ADDED : செப் 22, 2024 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: சேலத்தை சேர்ந்த கிஷோர், 26, ராகுல், 27, பிரகாஷ், 29 ஆகிய, 3 பேரும், நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி, நேற்று அதிகாலை, சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, ராசிபுரம் ஏ.டி.சி., டிப்போ அருகில் சாலையோரமாக உள்ள பட்டறையில் பழுது பார்ப்பதற்காக லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. சொகுசு காரை, கிஷோர் ஓட்டினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த, 3 பேரும் படுகாயமடைந்தனர். பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.