/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விவசாயியை தாக்கிய தம்பதி மீது வழக்கு
/
விவசாயியை தாக்கிய தம்பதி மீது வழக்கு
ADDED : அக் 28, 2024 05:13 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, பெருமாள்
கோவில்மேட்டை சேர்ந்தவர் அய்யாவு, 65; இவரது பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 61. இருவருக்கும் தடப்-பிரச்னையில் முன்விரோதம் இருந்தது.
நேற்று, அய்யாவு தன் காட்டை பொக்லைன் மூலம் சமன்படுத்தும் பணியில் ஈடுபட்-டிருந்தார். அப்போது, அங்கு வந்த மாதேஸ்வரன் மற்றும் அவரது மனைவி அமுதா ஆகிய இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அய்யாவு, பொக்லைன் இயந்திரத்தை திருப்பி அனுப்பி விட்டார். ஆனாலும், மாதேஸ்வரன் மற்றும் அமுதா ஆகிய இருவரும், வீட்டிலிருந்து அரிவாளை எடுத்து வந்து அய்-யாவை தாக்கினர். இதில், கையில் காயமடைந்த அய்யாவு, ஆத்துார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு-கிறார். இதுகுறித்து புகார்படி, ஆயில்பட்டி போலீசார், தம்பதியர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.