/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து ரூ. 3 கோடி மதிப்புள்ள இயந்திரங்கள் சேதம்
/
தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து ரூ. 3 கோடி மதிப்புள்ள இயந்திரங்கள் சேதம்
தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து ரூ. 3 கோடி மதிப்புள்ள இயந்திரங்கள் சேதம்
தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து ரூ. 3 கோடி மதிப்புள்ள இயந்திரங்கள் சேதம்
ADDED : செப் 20, 2024 02:37 AM
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால், மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் எரிந்து நாசமானது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே, செருக்கலை புதுப்பாளையத்தை சேர்த்தவர் காமராஜன், 38, நாமக்கல்லை சேர்ந்த சித்ரா, தசரதன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து, பரமத்தி அருகே கோதுர் பகுதியில் தேங்காய் நார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகின்றனர். இங்கு, 60 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு தொழிற்சாலையில் மின் கசிவால் தீப்பொறி எழுந்துள்ளது. பின், தேங்காய் நார் மீது தீப்பொறி விழுந்ததால் தீப்பிடித்து புகை வந்துள்ளது. பெரும்பாலான தொழிலாளர்கள் பணியை முடித்து விட்டு, வீட்டுக்கு திரும்பியதால் சிலர் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் தீ மளமளவென பரவி, அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த தேங்காய் நார்கள் மற்றும் குடோன்களில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த தேங்காய் நார்களிலும் பிடித்துக் கொண்டது.இதையடுத்துத சம்பவ இடத்துக்கு, திருச்செங்கோடு தீயணை ப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில், தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்கள் மற்றும் தேங்காய் நார்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. சேத மதிப்பு மூன்று கோடி ரூபாய் இருக்கும் என தெரிகிறது. பணி முடிந்த பின், தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்து குறித்து, நல்லுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.