/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோகனுார் அருகே ரயில்வே பணிக்காக தோண்டிய குழியில் தவறி விழுந்தவர் பலி

ADDED : மே 23, 2024 07:05 AM
மோகனுார் : மோகனுார் தாலுகா, குமரிபாளையம் பஞ்., சின்னத்தம்பிபாளையம் அடுத்த தண்ணீர்பந்தலை சேர்ந்தவர் விஜயகுமார், 25.
கோழி கூண்டு தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். தினமும் வேலைக்கு சென்று விட்டு, இரவு வீட்டுக்கு திரும்புவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வெகு நேரமாகியும் விஜயகுமார் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம் மற்றும் மகனின் நண்பர்கள் வீடுகளில் தேடியும் காணவில்லை.இதற்கிடையே, நெய்க்காரன்பட்டியில் இருந்து மல்லுமாச்சம்பட்டி செல்லும் வழியில் உள்ள ரயில்வே கேட் அருகில், சாலை போட தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் ேஹாண்டா பைக்குடன் விழுந்து கிடந்துள்ளார். அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார்.அப்பகுதியில் ரயில்வே கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் முன்னெச்சரிக்கை பலகை வைக்காததால், விஜயகுமார் இறக்க நேரிட்டது. அதனால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மோகனுார் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.