/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சொந்த ஊர் சென்று திரும்பியவர் பண்ணையில் விபரீத முடிவு
/
சொந்த ஊர் சென்று திரும்பியவர் பண்ணையில் விபரீத முடிவு
சொந்த ஊர் சென்று திரும்பியவர் பண்ணையில் விபரீத முடிவு
சொந்த ஊர் சென்று திரும்பியவர் பண்ணையில் விபரீத முடிவு
ADDED : டிச 12, 2025 05:11 AM
புதுச்சத்திரம்: தர்மபுரி மாவட்டம், வீரப்பநாயக்கன்பட்டி அடுத்த கூடலுாரை சேர்ந்தவர் பழனி மகன் பிரபு, 27. இவருக்கு சதா, 22, என்ற மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். பிரபு தனது தந்தை பழனி, தாய் பார்வதி மற்றும் அண்ணன் சதீஷ் ஆகியோருடன் நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த ஆர். புளியம்பட்டியில் உள்ள செந்தில்குமார் கோழிப்பண்ணையில் தங்கி வேலை செய்து வந்தார். இவர்கள் அனைவரும் முட்டை சேகரிப்பது, கோழிகளுக்கு தீவனம் வைப்பது போன்ற வேலைகளை செய்து வந்தனர்.
இரு நாட்களுக்கு முன்பு, பிரபு தனது சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் அரூர் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் திரும்பும் வழியில், மல்லுார் அருகே விபத்து ஏற்பட்டதாக மொபைல்போனில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது அண்ணன் சதீஷ், அவரை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பண்ணையில் முட்டை எடுப்பதற்காக பிரபு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பாததால், சந்தேகமடைந்த உறவினர்கள் சென்று பார்த்தபோது, அங்கு அவர் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புதுச்சத்திரம் போலீசார் உடலை மீட்டு, இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

