/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இரவில் நோட்டமிடும் ஆசாமி பள்ளிப்பாளையத்தில் 'திக்திக்'
/
இரவில் நோட்டமிடும் ஆசாமி பள்ளிப்பாளையத்தில் 'திக்திக்'
இரவில் நோட்டமிடும் ஆசாமி பள்ளிப்பாளையத்தில் 'திக்திக்'
இரவில் நோட்டமிடும் ஆசாமி பள்ளிப்பாளையத்தில் 'திக்திக்'
ADDED : நவ 25, 2024 01:26 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையத்தில் இரவில் நோட்டமிடும் மர்ம ஆசாமியால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட நாட்டாகவுண்டம் புதுார் பகுதியில் நுாற்றுக்கணக்கான வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் சில நாட்களுக்கு முன், 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர், முதுகில் பையை மாட்டிக்கொண்டு இரவில் ஒவ்-வொரு வீடாக சென்று நோட்டமிட்டு செல்கிறார்.
ஒரு வீட்டின் தாழ்வாரம் வரை சென்று திரும்புகிறார். தொடர்ந்து, அருகில் உள்ள வீட்டை நோட்டமிட செல்கிறார். இந்த காட்சி அப்பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ நேற்று பரவி-யதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதன் அடிப்படையில் பள்ளிப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த சில நாட்களா-கவே, இப்பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் காணப்படுகிறது. டூவீலர் திருட்டும் அதிகரித்துள்ளது. மர்ம ஆசாமி ஒவ்வொரு வீடாக சென்று நோட்டமிடுகிறார்.
எதற்காக வந்து செல்கிறார் என தெரியவில்லை. நகை, திருட்டு போன்ற செயல்களில் ஈடுபடும்போது, கொலை வெறி தாக்கு-தலில் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்-ளது.
குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், வயதான-வர்கள் பீதியில் உள்ளனர். இரவில் இப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு கூறினர்.