/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காலம் மாறினாலும் குறையாத மவுசு ; கயிற்று கட்டிலுக்கு என்றுமே வரவேற்பு
/
காலம் மாறினாலும் குறையாத மவுசு ; கயிற்று கட்டிலுக்கு என்றுமே வரவேற்பு
காலம் மாறினாலும் குறையாத மவுசு ; கயிற்று கட்டிலுக்கு என்றுமே வரவேற்பு
காலம் மாறினாலும் குறையாத மவுசு ; கயிற்று கட்டிலுக்கு என்றுமே வரவேற்பு
ADDED : ஜன 16, 2025 06:39 AM
பள்ளிப்பாளையம்: காலங்கள் பல உருண்டோடி, நவீன உலகம் நம்மை மாற்றினாலும், நம் முன்னோர்கள் பயன்படுத்திய கயிற்று கட்டில், இன்றளவும் மவுசு குறையாமல், பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம், வெப்படையை சேர்ந்த கோவிந்த ராஜ், குடிசை தொழிலாக கயிற்று கட்டில்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
அவரிடம் நாம் பேசியபோது கூறியதாவது: மரச்சட்டம், மூங்கில் ஆகியவற்றில் கயிற்று கட்டில் தயாரிக்கிறோம். கருவேலம், வாகை, வேம்பு உள்ளிட்ட மரங்களில், கட்டில்களுக்கு தேவையான சட்டம் தயார் செய்யப்படுகிறது. 6 அடி நீளம், 3.5 அடி அகலம் எனற அளவில் கட்டில் தயார் செய்யப்படுகிறது. கட்டில்களுக்கு தேவையான சட்டம் தயார் செய்த பின், நுால் கயிற்றைக்கொண்டு அவை பின்னப்படுகிறது. கட்டிலின் தரம், அளவை பொறுத்து, 1,300 ரூபாய் முதல், 5,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் விரும்பும் வண்ணங்களில், கயிறுகள் பின்னி தரப்படும். தயார் செய்யப்படும் கட்டில்களை, வெளிமாவட்ட வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர். கயிற்று கட்டிலில் படுத்து உறங்குவதன் மூலம், உடலில் ரத்தம் ஓட்டம் சீராகிறது. இடுப்பு, முதுகு வலி குணமாகிறது. நிம்மதியான துாக்கம் வரும். கோடைகாலத்தில் விற்பனை இரண்டு மடங்கு அதிகரிக்கும். மற்ற நேரங்களில் விற்பனை ஓரளவு இருக்கும். காலங்கள் பல உருண்டோடினாலும், நவீன உலகம் நம்மை மாற்றினாலும், நம் முன்னோர்கள் பயன்படுத்திய கயிற்று கட்டில், இன்றளவும் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதால், விற்பனையும் அதிகரித்தே காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

