/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேந்தமங்கலம் அருகே டாஸ்மாக் பணியாளர்கள் மீது மர்ம கும்பல் வெறிச்செயல்
/
சேந்தமங்கலம் அருகே டாஸ்மாக் பணியாளர்கள் மீது மர்ம கும்பல் வெறிச்செயல்
சேந்தமங்கலம் அருகே டாஸ்மாக் பணியாளர்கள் மீது மர்ம கும்பல் வெறிச்செயல்
சேந்தமங்கலம் அருகே டாஸ்மாக் பணியாளர்கள் மீது மர்ம கும்பல் வெறிச்செயல்
ADDED : ஏப் 28, 2024 04:12 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு டூவீலரில் சென்ற பணியாளர்களை, மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேந்தமங்கலம் டவுன் பஞ்., காந்திபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் பணரோசா, 46. இவரும், அதே பகுதியை சேர்ந்த உதயகுமார், 45, கோகிலன், 43, ஆகிய, 3 பேரும் நைனாமலை ரோட்டில் உள்ள சாலையூர் டாஸ்மாக் கடையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு டாஸ்மாக் கடையில் கணக்கை முடித்து விட்டு கடையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு, வேறு டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ரவிக்குமார், 43, என்பவருடன், 2 டூவீரில் சேந்தமங்கலத்திற்கு சென்றுள்ளனர்.
கடையில் இருந்து, 100 மீட்டர் சென்றதும், 3 டூவீலர்களில் ஆயுதங்களுடன் வந்த, 9 பேர் கொண்ட மர்ம கும்பல், முதலில் ரவிக்குமார் சென்ற டூவீலரை உதைத்துள்ளனர். அப்போது, அவர்கள் கீழே விழுந்ததும், மற்றொரு டூவீலரில் சென்ற பணரோசா, உதயகுமாரை கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில், விற்பனையாளர் பணரோசாவிற்கு கையில் வெட்டு விழுந்து கை துண்டானது. இதையடுத்து, அவர்கள் சத்தம் போட்டதை தொடர்ந்து, அந்த வழியாக லாரியில் சென்றவர்கள் நின்றுள்ளனர். இதை பார்த்ததும் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
தகவல் அறிந்து சென்ற சேந்தமங்கலம் போலீசார், வெட்டு காயங்களுடன் இருந்த பணரோசா, மற்றும் உதயகுமாரை மீட்டு நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ கல்லுாரிக்கு அனுப்பி வைத்தனர். இதில், கை துண்டான பணரோசா சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

