ADDED : செப் 07, 2026 05:34 AM

அ நிறம் | அளவு
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் யூனியன், ராமாபுரம் பஞ்., கொசவம்பாளையம்
அருந்ததியர் தெரு பகுதியில், 150க்கும் அதிகமான
குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில்,
கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன் ஊரின் மையப்பகுதியில் பொது கிணறு தோண்டப்பட்டது. இதுவரை இந்த கிணற்றுக்கு கம்பிவளையம் எதுவும் அமைக்கப்படவில்லை.இப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் இவ்வழியை கடந்து தான் அங்கன்வாடி மையத்திற்கும், பள்ளிக்கும் செல்ல வேண்டும்.
அவ்வாறு
செல்லும் குழந்தைகள் அடிக்கடி கிணற்றை எட்டி பார்ப்பதால் தவறி
கிணற்றுக்குள் விழ வாய்ப்புள்ளது. 60 அடி ஆழம் உள்ள இந்த கிணற்றில்
குழந்தைகள் தவறி விழுந்தால் உயிர்பலி கூட நேரிடலாம். எனவே, கிணற்றுக்கு
கம்பி வளையம் அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
