/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பொது கிணற்றுக்கு கம்பி வளையம் தேவை
/
பொது கிணற்றுக்கு கம்பி வளையம் தேவை
ADDED : செப் 28, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொது கிணற்றுக்கு
கம்பி வளையம் தேவை
எலச்சிபாளையம், செப். 28-
துத்திபாளையத்தில், பொது கிணற்றுக்கு கம்பி வளையம் இல்லாததால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எலச்சிபாளையம் ஒன்றியம், மானத்தி பஞ்., துத்திபாளையம் கிராமத்தில், 40 ஆண்டுகளுக்கு முன், குடியிருப்புகள் அருகே பொது கிணறு தோண்டப்பட்டது. இதுவரை கிணற்றுக்கு கம்பி வளையம் அமைக்கப்படவில்லை. இங்குள்ள குழந்தைகள் கிணற்றின் அருகில் விளையாட வரும்போது, தவறி விழுந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே, கிணற்றுக்கு கம்பி வளையம் அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.