/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இன்று சேலம், நாமக்கல்லில் 8 மையத்தில் அஞ்சல் துறை நடத்தும் வினாடி - வினா
/
இன்று சேலம், நாமக்கல்லில் 8 மையத்தில் அஞ்சல் துறை நடத்தும் வினாடி - வினா
இன்று சேலம், நாமக்கல்லில் 8 மையத்தில் அஞ்சல் துறை நடத்தும் வினாடி - வினா
இன்று சேலம், நாமக்கல்லில் 8 மையத்தில் அஞ்சல் துறை நடத்தும் வினாடி - வினா
ADDED : ஜன 06, 2024 01:09 PM
சேலம்: இந்திய அஞ்சல் துறை சார்பில் தபால் தலை சேகரிப்பு உதவித்தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அதில் இணைய தபால் தலை சேகரிப்பு வினாடி - வினா போட்டியை அறிவித்தது. இதில், 6 முதல் பிளஸ் 1 வரை படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். வெற்றி பெறுவோருக்கு, 6,000 ரூபாய் பரிசுத்தொகை கிடைக்கும். அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில், 6 முதல் பிளஸ் 1 வரை படிப்போர் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் பள்ளியில் தபால்தலை சேகரிப்பு சங்கம் செயல்பட வேண்டும். இல்லையெனில் சொந்தமாக தபால்தலை சேகரிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும்.
உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படும்போது சமீபத்திய இறுதி தேர்வில் குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்.சி., - எஸ்.டி., மாணவ,மாணவியருக்கு மதிப்பெண்ணில், 5 சதவீத தளர்வு உண்டு என்ற விதிமுறைப்படி, இன்று தேர்வு நடக்கிறது.இதற்கு கடந்த ஜூலை, 29 வரை விண்ணப்பம் பெறப்பட்டு தகுதி அடிப்படையில், சேலம் மேற்கு கோட்டத்தில், 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மேட்டூர் அடுத்த புதுச்சாம்பள்ளி மால்கோ வித்யாலயா பள்ளியில், இன்று காலை தேர்வு நடக்கிறது.
அதேபோல் சேலம் கிழக்கு கோட்டத்தில், 241 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். அவர்களுக்கு சேலம் பாலபாரதி, ராயல் பார்க், கொண்டலாம்பட்டியில் உள்ள வித்யாமந்திர் பள்ளி, ஆத்துார் பாரதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி என, 4 மையங்களில் தேர்வு நடக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில், 397 பேர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, கொங்கணாபுரத்தில் உள்ள அப்பு அறிவாலயம், ஏ.ஜி.என்., மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகம், நாமக்கல்லில் வேலம்மாள் பள்ளி வளாகம் ஆகிய மையங்களில் தேர்வு நடக்கிறது. அதேபோல் நாடு முழுதும் வினாடி - வினா போட்டி நடக்கிறது என அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.