/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெப்படையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டுகோள்
/
வெப்படையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டுகோள்
வெப்படையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டுகோள்
வெப்படையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டுகோள்
ADDED : அக் 08, 2024 04:13 AM
பள்ளிப்பாளையம்: 'வெப்படையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும்' என, வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்-தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிப்பாளையம், வெப்படை பஸ் ஸ்டாப் அருகே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், நேற்று முன்தினம் இரவு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மணிகண்டன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், வெப்படை பகுதியில் அரசு தொழிற் பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும். பஸ் ஸ்டாப்பில், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி அமைக்க வேண்டும். வெப்படை பிரிவு சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளதால், காலை, மாலை வேளையில் போக்குவரத்து போலீசார் சீரமைப்பு பணியில் ஈடுபட வேண்டும். இ.எஸ்.ஐ., மருத்துவமனை, 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். நுாற்பாலைகளில் பி.எப்., - இ.எஸ்.ஐ., போன்றவை தொழிலாளர்களுக்கு வழங்கு-வதில்லை. இதை தொழிலாளர் நலத்துறை கண்காணித்து, தொழி-லாளர் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். வெப்படை வழித்-தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்-டன.