/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோவிலுக்கு வந்த பக்தரை பாம்பு தீண்டியது
/
கோவிலுக்கு வந்த பக்தரை பாம்பு தீண்டியது
ADDED : அக் 05, 2025 01:06 AM
ராசிபுரம், ராசிபுரத்தில், கைலாசநாதர் சிவன் கோவில் உள்ளது. சிவன், பைரவர், சனீஸ்வரர், நவகிரகங்கள், விநாயகருக்கு தினசரி சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் மாலை, நாமக்கல் காவேட்டிப்பட்டியை சேர்ந்த புவனன், 45, என்பவர் கோவிலுக்கு வந்துள்ளார். சுவாமியை தரிசனம் செய்து விட்டு, அருகில் உள்ள நவகிரகங்களை சுற்றி வந்துள்ளார்.
அப்போது அங்கு அபி ேஷக தண்ணீர் செல்வதற்கான சிறிய கால்வாய் உள்ளது. அங்கு புவனன் வந்தபோது பாம்பு ஒன்று தீண்டியது. இதனால், பதற்றம் அடைந்த புவனன், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். கோவிலில் இருந்தவர்கள் அந்த பாம்பு, விஷம் இல்லாத தண்ணீர் பாம்பு ரகத்தை சேர்ந்தது என தெரிவித்தனர்.