/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓடை ஆக்கிரமிப்பால் ஜல்லி கற்களாக மாறிய தார்ச்சாலை
/
ஓடை ஆக்கிரமிப்பால் ஜல்லி கற்களாக மாறிய தார்ச்சாலை
ADDED : மே 28, 2024 07:10 AM
நாமகிரிப்பேட்டை : ஓடை ஆக்கிரமிப்பு காரணமாக சாலையில் வழிந்தோடிய மழைநீரால், தார்ச்சாலை ஜல்லி கற்களாக மாறியுள்ளது.
நாமகிரிப்பேட்டை யூனியன், மூலபள்ளிப்பட்டி பஞ்.,ல் இருந்து அரசு தொடக்கப்பள்ளி வழியாக நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., வெள்ளக்கல்பட்டிக்கு செல்ல தார்ச்சாலை உள்ளது. இந்த சாலை பசிறுமலையை ஒட்டி அமைந்துள்ளது. ஏற்கனவே இப்பகுதியில், ஒரு கிலோ மீட்டருக்கு சாலை இல்லாததால் விவசாயிகள் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், நாமகிரிப்பேட்டை, மூலப்பள்ளிப்பட்டி எல்லை பகுதியில் பசிறுமலையில் இருந்து செல்லும் மழைநீர் ஓடையில் சிலர் மண் கொட்டி அடைத்துள்ளனர். வண்டிகள் செல்வதற்காக ஓடையை அடைத்துள்ளனர்.கடந்த வாரத்தில் பெய்த தொடர் மழையில், பசிறு மலையில் இருந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால், ஓடையில் மண் கொட்டி அடைத்துள்ளதால் மழைநீர் முழுவதும் தார்ச்சாலையில் ஓடியது. இதனால் தார்ச்சாலை முற்றிலும் சேதமடைந்து விட்டது. தற்போது, தார்ச்சாலையில் ஜல்லிக்கற்கள் மட்டுமே தெரிகிறது. எனவே, இப்பகுதியில் புதியதாக தார்ச்சாலை அமைப்பதுடன், ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.