ADDED : மார் 31, 2025 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செங்கோடு: நாமக்கல்லில் இருந்து பள்ளிப்பாளையம் பேப்பர் மில்லுக்கு, சவுக்கு மரங்கள் ஏற்றிய லாரி ஒன்று, நேற்று காலை, 4:30 மணிக்கு புறப்பட்டது. திருச்செங்கோடு, எட்டிமடைபுதுார் பிரிவு ரோடு அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் வலது புறத்தில் இருந்த ஓட்டலுக்குள் புகுந்து நின்றது. இந்த விபத்தில் ஓட்டலின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது.
ஓட்டலில் யாரும் இல்லாததால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்ப-டவில்லை. லாரி டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். விபத்து குறித்து, திருச்செங்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.