/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் தொடர் மழை அடிவாரத்தில் தோன்றிய நீர்வீழ்ச்சி
/
கொல்லிமலையில் தொடர் மழை அடிவாரத்தில் தோன்றிய நீர்வீழ்ச்சி
கொல்லிமலையில் தொடர் மழை அடிவாரத்தில் தோன்றிய நீர்வீழ்ச்சி
கொல்லிமலையில் தொடர் மழை அடிவாரத்தில் தோன்றிய நீர்வீழ்ச்சி
ADDED : அக் 18, 2024 03:09 AM
கொல்லிமலையில் தொடர் மழை
அடிவாரத்தில் தோன்றிய நீர்வீழ்ச்சி
ராசிபுரம், அக். 18-
கொல்லிமலைப்பகுதியில் தொடர் மழை எதிரொலி காரணமாக அடிவாரப்பகுதியில் சிறிய நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது.
வடகிழக்கு பருவமழையின் துவக்கம் மற்றும் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையிலும் ஆங்காங்கே கனத்த மழையுடன் தொடர் மழை பெய்தது. இதையடுத்த கொல்லிமலையில் உள்ள பெரியாறு, வரட்டாறு உள்ளிட்ட ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கொல்லிமலை ஒன்றியம் பைல்நாடு ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லி மலை அடிவாரம் கூவைமலையில் வரலாற்று பிரசித்தி பெற்ற பழனியாண்டவர் கோவில் உள்ளது. இதையொட்டி கொல்லிமலை நீரோடையும் செல்கிறது. இந்த ஓடை பேளுக்குறிச்சி வழியாக புதுச்சத்திரம் வரை செல்கிறது. கூவைமலை பழனியாண்டவர் கோவிலுக்கு பேளுக்குறிச்சி வழியாக செல்ல தார்சாலை வசதி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பழனியாண்டவர் கோவில் அருகே உள்ள ஓடையிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கோவில் அருகே உள்ள ஓடையில் தெளிந்த நீரும் உட்கார்ந்து குளிக்கும் அளவுக்கு குட்டைகளும் உள்ளன. அதேசமயம் கோவிலில் இருந்து, 500 மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றால் சிறிய நீர்வீழ்ச்சியும் உள்ளது. காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் நீர்வீழ்ச்சியை பார்க்கவும், குளிக்கவும் அதிகளவு வருகின்றனர்.
நீர்வீழ்ச்சி பகுதியையும், தேங்கி நிற்கும் குட்டைகளையும் சீரமைத்தால் இப்பகுதி மக்கள் மழை காலங்களில் அதிகளவு வந்து செல்வார்கள் என பேளுக்குறிச்சி பகுதியினர் தெரிவித்தனர்.