/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அறப்பளீஸ்வரர் கோயிலில் ஆடி 18 கொடியேற்று விழா
/
அறப்பளீஸ்வரர் கோயிலில் ஆடி 18 கொடியேற்று விழா
ADDED : ஆக 01, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், கொல்லிமலை ஒன்றியம், வலப்பூர் நாடு ஊராட்சியில், புகழ்வாய்ந்த அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. திருவிழாவையொட்டி நேற்று காலை, 10:00 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கு, வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வலம் வந்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று மாலை 5:00 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கிறது. நாளை மாலை திருக்கல்யாண உற்சவம், சுவாமி திருவீதியுலா நடைபெற உள்ளது.