/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆரத்தி விழா : பஜனை வழிபாடு நிறைவு
/
ஆரத்தி விழா : பஜனை வழிபாடு நிறைவு
ADDED : பிப் 23, 2024 01:48 AM
ப.வேலுார்:சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலையின் தெற்கில், ஏற்காடு மலையில் இருந்து திருமணி முத்தாறு பிறக்கிறது. இந்த நதி சேலம் நகரத்தில் நுழைந்து, சேலம், நாமக்கல் மாவட்டம் வழியாக, 120 மைல் பாய்ந்து ப.வேலுார் அருகே நன்செய் இடையாறு காவிரியில் கலக்கிறது.
மிகவும் பழமையான, புனிதம் நிறைந்த ஆறாக திருமணி முத்தாறு கருதப்படுகிறது. கடந்த, 8ல் சேலம் சேர்வராயன் மலை ஏற்காட்டில் தொடங்கிய திருமணிமுத்தாறு நதியின் புனிதத்தை காக்க யாத்திரை, ப.வேலுார் காவிரி ஆற்றில், நேற்று முடிவடைந்தது.அகில பாரதிய சந்நியாசிகள் சங்க நிறுவனர் சுவாமி ராமானந்த மகராஜ் தலைமையில் ஏராளமான துறவிகள், நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். சிவ மந்திரங்கள், பஜனையுடன் இந்த வழிபாடு நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.