ADDED : அக் 16, 2024 07:24 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, கல்லாங்காடு வலசு பகுதியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாள், 'விடியல் ஆரம்பம்' சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. அதில், அப்துல்கலாம் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பேச்சு, கட்டுரை போட்டி, யோகாசனம், நாடகம் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. அப்துல்கலாம் பிறந்தநாளில் தாய், தந்தையர் மற்றும் ஆசிரியர் சொல்படி நடப்போம் என மாணவ, மாணவியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்துல்கலாம் நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமை வகித்தார். இதில், 'அட்மா' குழு தலைவர் அசோக்குமார், நகர செயலாளர் தனபால் ஆகியோர், 30,000 ரூபாய் மதிப்பீட்டில் நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். தலைமை மருத்துவர் ஜெயந்தி, மக்கள் தொண்டு நிறுவனர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.